351542-pti-iit-madras-pic-edசென்னை ஐஐடி இந்திய அளவில் மிகவும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த கல்வி நிறுவனம் ஆசிய அளவிலும் புகழ் பெற்றுள்ளது. “டைம்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆசிய அளவிலான தரமான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி 62 இடத்தில் உள்ளது. மேலும் முதல் 100 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றுக்கான ரேங்கிங்கை பல்வேறு அமைப்புகள் வெளியிடுவதை போல “டைம்ஸ்’ என்னும் அமைப்பு தற்போது ஆசிய அளவிலான சிறாந்த 100 கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஆசிய அளவிலான பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதல் இடத்திலும், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 2-ஆம் இடத்திலும், சீனாவின் பெகிங் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்திய அளவில் மும்பை ஐஐடி 27-ஆவது இடத்திலும், காரக்பூர் ஐஐடி 51-ஆவது இடத்திலும், டெல்லி ஐஐடி 60-ஆவது இடத்திலும், சென்னை ஐஐடி 62-ஆவது இடத்திலும், ரூர்கி ஐஐடி 65-ஆவது இடத்திலும், குவாஹட்டி ஐஐடி 80-ஆவது இடத்திலும், கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 84-ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
மேலும் கான்பூர் ஐஐடி 101-110 தரவரிசையிலும், பஞ்சாப் பல்கலைக்கழகம் 111 – 120 தரவரிசையிலும், கொல்கத்தா பல்கலைக்கழகம், புணே பல்கலைக்கழகம் ஆகியன 141 – 150 தரவரிசையிலும், உத்தரப் பிரதேசம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் 151 – 160 தரவரிசையிலும், தில்லி பல்கலைக்கழகம் 161 – 170 தரவரிசையிலும், பிலானி பிர்லா தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனம் 191 – 200 தரவரிசையிலும் இடம்பெற்றிருக்கின்றன.
குவாகரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.) என்னும் நிறுவனமானது அண்மையில் வெளியிட்ட பட்டியலில் 43-ஆவது இடம் பிடித்திருந்த சென்னை ஐஐடி, “டைம்ஸ்’ தரவரிசைப் பட்டியலில் 62-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
English Summary: Asia’s top 100 Institutions, the quality of education at IIT Madras