51729339தமிழக மக்களின் குறிப்பாக சென்னை மக்களின் பால் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அவ்வப்போது பல புதிய நடவடிக்கைகளின் மூலம் பால் தேவையை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பால் பாக்கெட்டுகளை 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் வெப்பநிலையில் பாலை பதப்படுத்தி பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, இதற்கான இடம் தேர்வு குறித்து பால் வளத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இந்த ஆலையின் மூலம் தயார் செய்யப்படும் பால் பாக்கெட்டுகளை குளிர்பதன வசதி இல்லாமலேயே ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் சூரிய வெப்ப அமைப்பும், கூடுதலாக பால் சேமிக்கும் குளிர் அறை அமைத்தல் ஆகியவற்றுக்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளையும் அவர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். சென்னை மாநகரில் இப்போது 11.5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary :Pockets of fresh milk uses up to 3 months. Government of Tamil Nadu planning