இதுவரை சமையல் கியாஸ் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை இல்லாத நிலையிலும் மத்திய அரசு தரும் மானியத்தை வங்கிக்கணக்கு மூலம் பெற்று வந்தனர். ஆனால் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் அட்டை வங்கியில் சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே மானியம் என்றும் ஆதார் எண் தராதவர்களுக்கு மானியம் நிறுத்தம் செய்யப்படும் என்றும், எனவே செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை அவசியம் வங்க்யில் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மாதம் அதாவது ஜூலை முதல் ஆதார் எண் தராதவர்களுக்கு மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், செப்டம்பருக்குள் ஆதார் எண்ணை கொடுத்து விட்டால் 3 மாதம் மானியம் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செப்டம்பருக்கு பிறகு ஆதார் எண் சமர்பிக்கப்பட்டால் 3 மாதத்திற்குரிய மானியம் கிடைக்காது. எந்த மாதத்தில் அவர்கள் கொடுக்கிறார்களோ அந்த மாதத்தில் இருந்து மானியம் வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:– இந்த மாதத்தில் இருந்து ஆதார் எண் கட்டாயம் ஆகியுள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் கியாஸ் மானியம் பெற முடியாது. செப்டம்பர் வரை 3 மாதம் கருணை காலமாக வழங்கியுள்ளது. அதற்குள்ளாக ஆதார் எண் தந்து விட்டால் நிறுத்தப்பட்ட மாதங்களுக்கும் சேர்த்து மானியம் வழங்கப்படும். செப்டம்பருக்கு பிறகு கொடுத்தால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாத மானியம் கிடைக்காது. அதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் ஆதார் எண்களை கேட்டு வாங்குகிறோம்.
ஆதாருக்கு விண்ணப்பித்து இருந்தால் கூட போதும். அதை வைத்து நாங்களே ஆதார் எண் வந்து விட்டதா? என பார்க்கிறோம். தினமும் நூறு பேருக்கு குறையாமல் ஆதார் கார்டு பதிவு செய்ய வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கியாஸ் மானியம் ஒரு கோடியே 55 லட்சம் பேர் பெறுகிறார்கள். இதில் ஆதார் அட்டை நகல் ஒரு கோடியே 18 லட்சம் பேர் வழங்கியுள்ளனர். 56 லட்சம் வாடிக்கையாளர்கள் இன்னும் ஆதார் அட்டை வழங்கவில்லை. இந்த 3 மாதத்திற்குள் இவர்கள் வழங்காவிட்டால் மானியம் ரத்தாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary :By September 30, the only subsidy to those Aadhaar number. The Central Government Notice