டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே 2 நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில் ஜூலை 22ஆம் தேதி நீதிபதி எம்.எம்.ஐ கலிபுல்லா அவர்கள் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து காலியாக இருக்கும் நீதிபதி எண்ணிக்கை மூன்றாக உயரவிருக்கின்றது.
இந்த 3 காலியான இடங்களுக்கு நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர், ஜே.எம்.ஜோசப், எஸ்.கே.கவுல் ஆகியோர் நியமிக்கப்படுகிறார். நீதிபதி மஞ்சுளா செல்லூர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் தற்போது கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கிறார்.
நீதிபதி ஜே.எம்.ஜோசப் கேரளாவைச் சேர்ந்தவர். உத்தரகண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கிறார். இவர் சமீபத்தில் உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் பட்டதை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியவர்.
மற்றொரு நீதிபதி எஸ்.கே. கவுல் டெல்லியைச் சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கிறார்.
இந்த 3 நீதிபதிகளும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். கொலிஜியம் அமைப்பு இவர்கள் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்பின்னர் ஜனாதிபதி புதிய நீதிபதிகளை நியமனம் செய்து அறிவிப்பார்
English Summary: 3 new judges, including Supreme Court Justice of the Madras High Court of Delhi.