தற்போது தொழிற்சங்கங்கள் இல்லாத நிறுவனங்களே இல்லை என்று கூறலாம். வணிக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் போன்ற பல அமைப்புகள் உள்ள தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செல்போன் செயலி மூலம் ஒரு தொழிற்சங்கத்தை ஏற்படுத்தி அதை பலவித பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார் சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர்.
சென்னை அயன்புரம் நெடுஞ்சாலையில் செல்போன் விற்பனையகம் வைத்து நடத்தி வரும் இவர் ‘செல்லூலார் ரீ-டைலர்ஸ்வெல்ஃபேர் அசோசியேசன்’ (Cellular Retailers Welfare Association) என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவர். செல்போன் விற்பனை, ரீ-சார்ஜ், செல்போன்களின் இந்த நிமிட மார்க்கெட் விலை, செல்போன் விற்பனையில் ஈடுபட்டுள்ளோருக்கான ஆலோசனைகள் என்று அனைத்தையும் ஒருங்கிணைக்கும் விதமாக புதிய ” செயலி ” ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.
இந்த செயலி குறித்து விஸ்வநாதன் கூறியதாவது : “அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக அசோசியேசனில் (கட்டணம் ஏதுமில்லை) பதிவு செய்து கொள்ள வேண்டும். ப்ளே ஸ்டோரில் சென்று CRWF என்று டைப் செய்ய வேண்டும். தொடர்ந்து இ-மெயில், பாஸ் வேர்டு கொடுத்து உள்ளே போய் தேவைப்படும் தகவல்களைப் பெறலாம். கடையின் பெயர், முகவரி, டின் நம்பர் (சேல் டாக்ஸ் பதிவெண்), பயனாளியின் மொபைல் எண் ஆகியவைகளை இதில் பதிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து கம்பெனி செல்போன்களின் அன்றைய விலை, டி.டி.எச். (டிஸ்-) தொடர்பான தகவல் பரிவர்த்தனை, அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிற செல்போன் தொழிலில் உள்ளவர்களின் குறைகள், எஸ்.எம்.எஸ். குறித்த தகவல்கள், ரீ-சார்ஜ் குறித்தவைகள், அசோசியேசனில் உள்ளோர் குடும்ப நிகழ்வுகள், அசோசியேசன் மூலமாக எதிர்கால திட்டம் குறித்த “வாட்ஸ்- அப் வழி கூட்டங்கள்” இப்படி பலவற்றை செய்ய முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக செல்போன் நிறுவனங்களின் விளம்பரங்களை இந்த “ஆப்” பில் கொண்டு வரவும், அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பயனுள்ள வழியில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் குடும்பங்களுக்கு பயன்படுத்தவும் இப்போது கைவசம் திட்டமிருக்கிறது. இன்னும் இதை எப்படியெல்லாம் கொண்டு போக முடியும் என்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
‘இந்த செயலியை கண்டு பிடிக்க ஐந்துமாதங்கள் ஆனதாகவும், ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கிய திருப்தி இருப்பதாகவும் விஸ்வநாதன் மேலும் கூறியுள்ளார்.
English Summary: A union with Cellphone Android App. Chennai,Tamilian rare achievement