அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கட்டுப்பாட்டில் பூமியில் இருந்து 354 கி.மீ. தொலைவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் (ஐ.எஸ்.எஸ்.) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நிறுவப்பட்டுள்ள அதி நவீன திறன்மிக்க டி.எஸ்.எல்.ஆர்.கேமரா மூலம் உலகின் எந்த இடத்தையும் படமெடுக்கும் வசதி உண்டு.
இந்த கேமிரா மூலம் பூமியை விதவிதமாக படமெட்டுக்கலாம். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் வானியல், புவி அறிவியல் குறித்த அறிவாற்றலை ஊக்குவிக்கும் வகையில் நாசா மிஷன் சாலிரைடு வானியல் அறிவியல் கழகம் வழிகாட்டுதலுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ள கேமரா மூலம் பூமியை படமெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜூலை 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொண்டு பூமியின் பல்வேறு இடங்களை படம் எடுத்தனர். சென்னையை அடுத்த படப்பை ஆல்வின் சர்வதேசப் பள்ளியில் மாணவர்களுக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உதவியுடன் பூமியைப் படமெடுக்க நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
இணையதளம் உதவியுடன் விரும்பும் நாடுகள், இடங்களின் புகைப்படங்களை எடுக்க உதவும் இந்த தொழில்நுட்பப் பயிற்சியை, மாணவர்களுக்கு வானியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவன மேலாளர் எஸ்.வெங்கட்நாராயணன், ஏ.பிரபாகரன் ஆகியோர் கற்று தந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் என்.விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
English Summary :As to the fate of the earth radar training school students in Chennai