இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் வங்கிகளை போலவே பணப்பரிவர்த்தனை சேவை நடைபெற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. தற்போதை கம்ப்யூட்டர் காலகட்டத்தில் இமெயில், இண்டர்நெட் போன்ற வசதிகளை அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டதால் கடிதம் அனுப்பும் முறை கிட்டத்தட்ட முற்றிலும் ஒழிந்துவிட்டது. எனவே அஞ்சலகங்களும் காலத்திற்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக்கொள்ள புதிய வழிமுறைகளை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நுகர்வோர்களுக்கு தேவையான பொருட்களையும் அஞ்சலகங்களில் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது அஞ்சலகங்களில் வங்கிகளை போல சேவை அடுத்த ஆண்டு முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் அஞ்சலக வங்கிச்சேவைக்கு என ஒரு லோகோவை தயார் செய்ய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி லோகோவை வடிவமைக்க பொது மக்களுக்கு வாய்ப்பளித்து, சிறந்த லோகோவுக்கு பரிசுத் தொகையும் தர அஞ்சல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிபந்தனைகளின்பேரில், “இலச்சினை வடிவமைப்பு’ (லோகோ), “இணைப்பு சொற்கள்’ (டேக்லைன்) ஆகியவற்றை கற்பனை வளத்துகேற்றார் போல் வடிவமைத்து ஜூலை 31-க்குள் அனுப்ப வேண்டும்.
சிறந்த இலச்சினைக்கும், இணைப்பு சொற்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என இரு பரிசுகள் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களை, https://www.mygov.in/sites/default/files/mygov_14677183401.pdf என்னும் இணையதளத்தில் அறியலாம்.
English Summary: Do You Want Rs 25,000 Cash prize? Read the announcement of the postal