கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் தேடுதளத்தை விட பிரபலமாக இருந்தது பிரபல தேடுதல் தளமான யாகூ. ஆனால் நாளடைவில் கூகுள் புகழ்பெற்று அனைத்து இணையதள பயனாளிகளிடமும் பிரபலமானதால் யாஹூவின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. இந்நிலையில் யாஹூ நிறுவனத்தை பிரபல தொலைதொடர்பு நிறுவனமான வெரைஸான் நிறுவனம் 4.83 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் யாஹூ நிறுவனத்தின் கைமாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினார்கள். 2000ஆம் ஆண்டு யாஹூ மெயில் மிகவும் பிரபலம். இப்போதும்கூட 40 வயதிற்கு மேற்பட்டோர்கள் அதிக அளவில் யாஹூ மெயிலைத்தான் பயன்படுத்துகின்றனர். மேலும் யாஹூ மெசஞ்சர் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. கூகுள், யூ-டியூப், பேஸ்புக் போன்ற புது வரவுகளால் யாகூவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கியது.
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சி செய்து வந்த நிலையில் 483 கோடி டாலர் கொடுத்து யாகூவை வாங்குகிறது வெரைஸான் தொலைத்தொடர்பு நிறுவனம். யாகூ நிறுவனம், சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில் வைத்துள்ள 15 சதவீத பங்கு மற்றும் யாகூ ஜப்பான் நிறுவனத்தில் உள்ள 35.5 சதவீத பங்கு ஆகியவற்றை தவிர்த்து மீதமுள்ள பங்குகள் கைமாறுகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,400 கோடி டாலர் கொடுத்து வாங்க முன்வந்தது. ஆனால் யாகூ மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
English Summary: Yahoo is going to cost the company. To $ 486 million buying Verizon