Karur_Vysya_Bank_logoதனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளில் கடந்த பல வருடங்களாக லாபத்துடன் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.146.35 கோடி என அறிவித்துள்ளது. வங்கியின் லாபத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் புதிய வழிமுறைகள் பின்பற்றப்படும் என அந்த வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் வருவாய் ரூ.1,547.31 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.1,518.50 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 2% அதிகமாகும்.

நிகர வட்டி வருவாய் 3.30 சதவீதத்திலிருந்து 3.52 சதவீதமாக அதிகரித்தது.

நிகர லாபம் ரூ.134.58 கோடியிலிருந்து 8.74% அதிகரித்து ரூ.146.35 கோடியாக இருந்தது.

கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வர்த்தகம் நடப்பு ஆண்டு ஜூன் மாத இறுதி நிலவரப்படி ரூ.90,096 கோடியை எட்டியுள்ளது.

இதில், திரட்டிய டெபாசிட் ரூ.45,659 கோடியிலிருந்து 11.07% வளர்ச்சி கண்டு ரூ.50,715 கோடியாக இருந்தது. வழங்கிய கடன் ரூ.37,220 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.39,382 கோடியாக காணப்பட்டது என்று கரூர் வைஸ்யா வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

English Summary: Karur Vysya Bank profit in the first quarter how much?