02PP_Lead_Rail_Aut_2797247gரயில்வே துறைக்கு வரும் வருமானத்தை அதிகரிக்க இத்துறையின் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சென்னையில் ரயில்வேக்கு சொந்தமான காலி நிலங்களை மேம்படுத்தி அதில் வணிக பயன்பாட்டிற்கான நிலமாக மாற்றி, வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ரயில் நிலையங்களை ஒட்டி, ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமாக, ஏராளமான காலி இடங்கள் உள்ளன. அவற்றில் சில நிலங்கள், முறையான பராமரிப்பிலும் பாதுகாப்பில் இருந்தாலும் வட சென்னையில் உள்ள சில ரயில்வே இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளால், மேம்பால ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், எந்த மேம்பாட்டு பணிகளையும் செய்ய முடியாமல், முடங்கி கிடக்கின்றன.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை முழுமையாக ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, அவற்றை வணிக ரீதியான பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே, நிலம் வளர்ச்சி குழும அதிகாரிகள், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையில் ரயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை மாநகராட்சி ஒத்துழைப்பு வழங்க முடிவாகி உள்ளது. ஒழுங்குமுறை விதிகளிலும் சில விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, ரயில்வே நிலங்கள், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்குவதை தவிர்க்கவும், வணிக வளாகங்கள், விடுதிகள் கட்டி வணிக, வர்த்தக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விரைவில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன.

English Summary : Corporation of Chennai Cooperation with recover occupied lands in the Railway