tnmatricschoolsஇந்த ஆண்டு நவம்பர், 30ம் தேதி வரை, கட்டாய கல்வி சட்டத்தில், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்’ என, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, கட்டாய கல்வி வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் மற்றொரு விதியின் படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து பிரிவு மாணவர்களுக்கும், எல்.கே.ஜி., எனப்படும் பள்ளி நுழைவு வகுப்பிலும்; மெட்ரிக் பள்ளிகள் என்றால், 1ம் வகுப்பிலும், அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீதம் இலவச இடஒதுக்கீடு வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி நடப்பு கல்வி ஆண்டில், 8,000 நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், இந்த சட்டப்படி, 89 ஆயிரம் பேருக்கு இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. மேலும், பலர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பள்ளிகளை நாடுகின்றனர். ஆனால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாக கூறி, பெற்றோரை திருப்பி அனுப்புகின்றனர்.

இது குறித்து, மெட்ரிக் இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து, ‘வரும் நவம்பர், 30 வரை இலவச கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர்களை சேர்க்கலாம்’ என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

English Summary :Compulsory Education Law. Matriculation school director’s major directive