1510346_495529573900037_2031445040_n‘தி சென்னை ஹெரிட்டேஜ் ஆட்டோ ராலி 2016’ என்ற பாரம்பரிய வாகனங்கள் அணி வகுக்கும் கண்காட்சி, சென்னையில் நாளை மறுநாள் அதாவது ஜூலை 31ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சிக்கு நூற்றுக்கணக்கான பாரம்பரிய வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இயங்கி வரும், ‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்’ என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் பாரம்பரிய வாகன கண்காட்சியை கடந்த 11ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 12வது கண்காட்சியை, ‘தி சென்னை ஹெரிட்டேஜ் ஆட்டோ ராலி 2016’ என்ற பெயரில், நாளை மறுநாள் நடத்தவுள்ளது. எழும்பூர், காசாமேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் காலை 9:00 மணிக்கு இந்த கண்காட்சி தொடங்குகிறது.

இந்த கண்காட்சியை பிரபல நடிகர் ஜீவா கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில், தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பழமையான, பாரம்பரியமான கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அணி வகுக்கவுள்ளன. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் கூடுதல் வாகனங்கள் இடம் பெறவுள்ளது. மேலும் இந்த கண்காட்சியில் பங்கேற்கும் பழங்கால கார்களில் சிறந்ததாக தேர்வு செய்யும் கார்களுக்கு, பரிசுகள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கு, டாபே, எம்.ஆர்.எப்.,சுந்தரம் மோட்டார்ஸ், தேவேந்திரா ஆகியோர், ‘ஸ்பான்சர்’ செய்கின்றனர். இத்தகவலை, ‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்’ கமிட்டி ஒருங்கிணைப்பாளரும், உறுப்பினருமான எம்.எஸ்.குகன் தெரிவித்தார்.

English summary:Exhibition of Vintage Vehicles in Chennai. Actor Jeeva, which start