amma-canteens_505_070114023435தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்றான ‘அம்மா உணவகம்’ சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தமாக வரும் ஆயிரக்கணக்கானோர்களுக்கு ‘அம்மா உணவகம்’ வரப்பிரசாதமாக காணப்படுகிறது. இந்நிலையில் ‘அம்மா உணவகத்தின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி சென்னையில் மேலும் 30 அம்மா உணவகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேலும் 30 இடங்களில் விரிவு படுத்தப்படுகிறது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சி பகுதியில் அம்மா குடிநீர் வழங்கல் சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த வருவாய் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இந்த திட்டத்தை 13.2.2016-ல் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக ஏழை- எளிய மக்கள் அதிகம் வசிக்கும் 20 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு தினமும் 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சுத்திரிகரிப்பு மையமும் 1 மணி நேரத்துக்கு 2,000 முதல் 4,000 லிட்டர் வரை குடிநீரை சுத்திகரித்து வழங்குகிறது.

இந்த திட்டம் மாநகராட்சி பகுதிகளில் மேலும் 30 இடங்களில் விரிவு படுத்தப்படுகிறது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.9 கோடியே 60 லட்சத்து 40 ஆயிரம் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பண்டைய நினைவு சின்னங்கள், கட்டிடங்களுக்கு சொத்துவரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

* சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு உள்பட சில பணிகள் தனியாருக்கு விடப்படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English Summary: 30 more Amma restaurants in Chennai. The Chennai Corporation