metroraillimitedசென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. மேலும் இந்த திட்டம் ரூ.20 ஆயிரம் கோடியில் 2 வழித்தடத்தில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதையடுத்து பல்வேறு இடங்களில் நடைப்பெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மெட்ரோ ரெயில் 2-வது கட்டதிட்டம் தயாரிக்கும் பணியும் ஒரு புறம் நடைப்பெற்று வருகின்றன. ரூ.44 ஆயிரம் கோடி செலவில் 3 வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான வரைவு தற்போது தயாராகியுள்ளது. 104.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 104 ரெயில் நிலையங்கள் இடம் பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாதவரம் மில்க் காலனியில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலான ஒரு திட்டத்தில் மூலக்கடை, ரமணா நகர், பெரம்பூர் ஜமாலியா, ரெட்டேரி, புரசைவாக்கம், கே.எம்.சி., சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஜெமினி, மந்தைவெளி, அடையார், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈச்சம்பாக்கம், வி.ஜி.பி. பொழுது போக்கு பூங்கா, அக்கரை, பனையூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 44.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைகிறது.

இரண்டாவதாக வழித்தடம் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் (சி.எம்.பி.டி) தொடங்கி கலங்கரை விளக்கம் வரை 15.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது.

3-வது வழித்தடம் மூலக்கடையில் தொடங்கி சோழிங்க நல்லூர் சிப்காட் வரை அமைக்கப்படுகிறது. இதில் ரெட்டேரி ஜங்சன், கொளத்தூர், வில்லிவாக்கம், பாடி, டி.வி.எஸ். நகர், அண்ணாநகர் மேற்கு, முகப்பேர் கிழக்கு, நெற்குன்றம், மேட்டுகுப்பம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ராமாபுரம், நந்தம் பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், உள்ளகரம், புழுதிவாக்கம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், பெல் நகர், மேடவாக்கம், திருவள்ளுவர்நகர், கைலாஷ்நகர் உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக செல்கிறது.

இந்த 3 வழித்தடங்கள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவைக்குள் கொண்டு வரப்படுகின்றன.

English Summary:Rs.44 Crore Metro Rail project in the 2nd phase.