NEET-5816சுப்ரீம் கோர்ட் விதிகளை மீறி, இரண்டு முறை, ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் எதிர்காலத்தில் நீட் தேர்வு எழுத முடியாது’ என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வான, நீட் தேர்வு, மே மாதம் 1ஆம் தேதி நடந்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 24ஆம் தேதி மீண்டும் தேர்வு நடந்தது. ‘ஏற்கனவே முதல்கட்ட தேர்வை எழுதியோர் விரும்பினால், இரண்டாம் கட்ட தேர்வை எழுதலாம். அதற்கு, முதற்கட்ட தேர்வு எண்ணை தாக்கல் செய்து, அதை ரத்து செய்ய வேண்டும்’ என்பது உட்பட, சில நிபந்தனைகளை, சுப்ரீம் கோர்ட் விதித்தது.

முதல் நீட் தேர்வை எழுதிய ஆயிரக்கணக்கானோர், இரண்டாம் கட்ட தேர்வில் பங்கேற்றுள்ளனர். ஆனால், முதல் தேர்வு முடிவு குறித்து, சி.பி.எஸ்.இ.,க்கு தகவல் அளிக்கவில்லை. எந்த தேர்வு முடிவை ஏற்பது என, கடிதம் அனுப்பும்படி, சி.பி.எஸ்.இ., கோரியும், பலர் இன்னும் கடிதம் அனுப்பாமல் உள்ளனர். இந்நிலையில், ‘இரண்டு தேர்வுகளையும் எழுதி, சுப்ரீம் கோர்ட் விதியை பின்பற்றாத மாணவர்கள் வரும் காலத்தில் நடக்கும் நீட் தேர்வை எழுத தடை விதிக்கப்படுவார்கள் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

English Summary : 2 times’NEET’ Wiriters the Exam Restricted in the next Exam. Notice EBSE