நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளும் பயன்படுத்தி எளிமையான அதே நேரத்தில் துல்லியமான சேவைகளை அளித்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளன. அதன்படி சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம் தங்கள் கல்வி நிறுவனங்களை முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர். மரியசினா ஜான்சன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை டிஜிட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதன் முதற்கட்டமாக எழுத்து தேர்வுகளை ஐபாட்-இல் நடத்தவுள்ளோம். பல்கலைக்கழக தேர்வின் போது ஐபாட்கள் வழங்கப்படும். தேர்வு முடிந்ததும், மாணவர்களின் அனைத்து விவரங்களும் பல்கலைகழகத்தின் மையக் கணினிக்கு மாற்றப்படும். தேர்வு முடிவுகளும் மறுநாளே அறிவிக்கபடும்.
எம்.ஏ (ஆங்கிலம்) மற்றும் எம்.பி.ஏ ஆகிய இரண்டு துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் மாணவர்கள் எளிதாக ஐபாட்-ஐ பயன்படுத்தி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். இம்முயற்சி வெற்றியடைந்தால் அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்த முடிவுச் செய்துள்ளோம்.
English Summary : The results of exam the next day. Sathyabama University of Madras