மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி இயக்கிவருமான பழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73
சிவாஜிகணேசன், பத்மினி நடித்த ‘வியட்நாம் வீடு’ படத்திற்கு முதன்முதலாக திரைக்கதை எழுதியதால் அவருக்கு ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் என்ற பெயர் ஏற்பட்டது. சிவாஜிகணேசன் நடித்த ‘கௌரவம்’, ‘ஞானப்பறவை’ ஆகிய இரு படங்கள், மற்றும் ‘விஜயா’, ‘தேவி ஸ்ரீகருமாரியம்மன்’ என நான்கு படங்களை இயக்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 25 படங்களுக்கு திரைக்கதை ஆசிரியாக பணியாற்றி உள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்த சுந்தரம் காலப்போக்கில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், உடல் நலக் குறைவால் நேற்று நள்ளிரவு காலமானார். சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். மயிலாப்பூர் மின் மயானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சுந்தரத்தின் மகள் அனு பார்த்தசாரதி திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary:The legendary director ‘Vietnam veedu’ Sundaram passed away