சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் மெட்ரோ ரெயில் திட்டத்தில் முதல் சேவையாககோயம்பேடு – ஆலந்தூர் இடையே ரெயில் சேவை கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த சேவைக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக ஆலந்தூர் – விமான நிலையம் இடையேயான உயர்மட்ட பாதை பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த வழித்தடத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் கடந்த மாதம் 28 மற்றும் 29ஆம் தேதி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் அவருக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இரு மார்க்கத்திலும் ரெயில்களை இயக்கி சோதனை நடத்தி வரப்படுகிறது. இம்மாதம் முழுவதும் இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் அதன்பின்னர் பயணிகள் போக்குவரத்து தொடங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கியதும் கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை பயணிகளுக்கு கிடைக்கும். இதனையடுத்து அடுத்த கட்டமாக சின்னமலை – ஆலந்தூர் இடையேயான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தட பாதுகாப்பு ஆய்வு பணிகள் நிறைவடைந்ததும் சோதனை ஓட்டம் தொடங்கும்.
English Summary: Start test drive Alandur-Airport. When passenger service?