Pen Kalvi Marathon (3)சென்னையில் அவ்வப்போது சமூக விழிப்புணர்வுக்காக மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் பெண் கல்வியை வலியுறுத்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை தீவுத்திடலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த மாரத்தான் போட்டியை நடிகர் விஷால் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: பெண்கள் தற்போது அரிய சாதனைகளை செய்து வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். பெண் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்துக்கு அதிகாலையிலேயே ஏராளமான பெண்கள் திரண்டு வந்திருப்பது மகிழ்ச்சியானது. பெண்கள் கல்வி கற்பது ஒட்டு மொத்த குடும்பத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. சமுதாயத்தில் பெண்களும் சொந்தக் காலில் நிற்பதற்கு கல்வியே அடிப்படை. எனவே பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வை அடித்தட்டில் இருக்கும் பெண்கள் வரை கொண்டு சேர்ப்பது நமது கடமை. பெண்கள் முன்னேற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய எப்போதும் நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் சிவாஜிகணேசன் மணிமண்டபம் குறித்த கேள்வி ஒன்றுக்கு ‘சிவாஜி மணி மண்டபம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற்கொள்வார் என்று நம்புகிறேன். எங்களால் ஆன முயற்சிகளையும் எடுப்போம்’ என்று பதிலளித்தார்.

English Summary :Running a marathon for Woman Education. Inaugurated by actor Vishal.