32,00,000 (32 இலட்சம்)
மேலே சொன்ன எண் லேசுப்பட்டதல்ல. அத்தனை இலட்சம் டெபிட் கார்டுகளின் செக்யூரிட்டி இந்தியாவில் காணாமல் போய் இருக்கிறது. இந்திய வங்கி வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய செக்யூரிட்டி ப்ரீச் நடப்பது இது தான் முதல் முறை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எச்.டி.எப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, என ஐந்து வங்கிகளின் டெபிட் கார்ட்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. 32 இலட்சத்தில் கிட்டத்திட்ட 26 இலட்சம் டெபிட் கார்டுகள் விசா, மாஸ்டர்கார்டு வகையை சார்ந்தவை. மீதம் இருப்பவை ரூபே கார்டுகள். ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி இந்த எண் 17.5 இலட்சம் கார்டுகளாக சொல்லப்படுகின்றன.
எது எப்படி இருந்தாலும், இந்த ஐந்து வங்கிகளில் கணக்கும் டெபிட் கார்டும் வைத்திருந்தால் முதலில் ஏடிஎம் பின்னினை மாற்றுங்கள். கால் சென் டருக்கு போன் செய்து இலவசமாக (டெபிட் கார்டு மாற்றங்களுக்கு சார்ஜ் உண்டு) உங்களுடைய டெபிட் கார்டினை மாற்ற முடியுமா என்று கேளுங்கள். நெட்பேங்கிங் / மொபைல் பேங்கிங் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே பாஸ்வேர்ட்டை தான் பயன்படுத்துவார்கள். எல்லா பாஸ்வேர்டையும் மாற்றுங்கள். அந்தந்த வங்கியோடு தொடர்பு கொண்டு எந்தளவிற்கு பாதிப்பு இருக்குமென்று கேளுங்கள்.
English Summary: Change Your ATM PIN Number right Now.