குமரிக் கடலுக்கும் மாலத்தீவுக்கும் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழகத்தில் இன்று (மார்ச் 28) ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, “குமரிக் கடலுக்கும் மாலத்தீவுக்கும் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும். வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

English Summary: Rain In South Tamil Nadu.