ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போர் விமானங்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், விமானங்கள் பழையதாகி விட்டதாலும் புதிய விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக அளவில் 100க்கும் மேற்பட்ட விமானங்க்களை கொள்முதல் செய்யவிருப்பது இதுவே முதல்முறை. போர் விமான ஒப்பந்தங்களில் உலகளவில் மிகப்பெரிய ஒப்பந்தம் இது. இதற்காக உலக அளவிலான டெண்டரை விமானப் படை கோரியுள்ளது.

‘make in India’ திட்டத்தின் கீழ் போர் விமாஙக்ளை தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமானங்களின் 85 சதவீத பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். மேலும் வெளிநாட்டு நிறுவனத்துடன் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என கூறப்படுகிறது.

ஸ்வீடனின் எஸ்ஏஏபி நிறுவனம், அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டீன், போயிங் நிறுவனம், பிரான்சின் டசால்ட், ரஷ்யாவின் மிக் உள்ளிட்ட பன்னாட்டு முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறாது. ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் முதல் விமானத்தை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானப் படையின் போர்த் திறனை அதிகரிக்க கூடுதல் போர் விமானங்களை வாங்க விமானப் படை கூறியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.59,000 கோடி மதிப்பிலான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

English Summary:IAF begins process to procure 114 fighter jets.