ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வாடிக்கையாளர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கும் அதிரடி சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.248 க்கு ரீசார்ஜ் செய்தால், 51 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு இலவசமாக 3 ஜிபி டேட்டா வீதம் 153 ஜிபிக்கள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வாடிக்கையாளர்கள் அனைவரும் கண்டு மகிழும் வகையில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக எஸ்டிவி-248 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதாவது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.248-க்கு ரீசார்ஜ் செய்தால், 51 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா இலவசமாகப் பெறலாம். 51 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக 153 ஜிபி டேட்டாக்கள் கிடைக்கும். மிகக்குறைந்த தொகையில் ஐபிஎல் போட்டிகளை செல்போனில் கண்டு மகிழலாம். இந்த திட்டம் 7-ம் தேதி முதல் நடைமுறைக்குவந்துள்ளது” தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டி தொடங்குவதை முன்னிட்டு ரூ. 251க்கு ரீசாராஜ் செய்தால், 102 ஜிபி டேட்டாக்கள் கிடைக்கும் வகையிலான திட்டத்தை அறிமுகம் செய்தது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐபிஎல் போட்டியை நேரலையில் ஹாட் ஸ்டார் டிவி ஆப் மூலம் பார்க்க வசதி செய்துள்ளது.

இப்போதுள்ள நிலையில், பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ரூ.248க்கு 153 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டமே வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிக்கனமான டேட்டா பேக் ஆகும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி சேவை மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: BSNL’s New Offer: Five Benefits Of Rs248 Prepaid Recharge Plan.