1390960728000-cell-phone-stock-photoசமீபத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும்போது படியில் நிற்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை கல்லூரி நிர்வாகங்கள் ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வகுப்பறையில் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் அதையும் மீறி செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியின் நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை விடுத்து நோட்டீசு போர்டில் ஒட்டி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிண்டி பொறியியல் கல்லூரியில் வாகனங்கள் நிறுத்த உத்தரவிட்டுள்ள இடத்திற்கு மாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.2 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இருசக்கர வாகனத்தை வளாகத்தில் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் வளாகத்தில் பிறந்த நாள் உள்ளிட்டவைகளை கேக் வெட்டி கொண்டாடினால் அல்லது பட்டாசு வெடித்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலுத்தவேண்டும்.
கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களோ அல்லது மாணவிகளோ பாலியல் தொந்தரவு கொடுத்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது 2 வருடம் ஜெயில் தண்டணை விதிக்கப்படும் அல்லது அந்த மாணவர் அல்லது மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்.
மேலும் மாணவர் அல்லது மாணவி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் பயன்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அடையாள அட்டை அணியாமல் வந்தால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

English Summary : A fine of Rs 1,000 for students who use cell phones in the classroom. Guindy Engineering College Warning