தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
இந்த ரெயில் (எண்.16101) தினந்தோறும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரெயில் எண்.16102 கொல்லத்தில் இருந்து தினமும் காலை 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். தர்மபுரி ரெயில் நிலையத்தில் இன்று பிற்பகல் நடந்த விழாவில் காணொலி காட்சி வழியாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு ரெயிலை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதேபோன்று தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை தினமும் இயக்கப்பட்டு வருகிற அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.16191), நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.