train-231215-1ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் இந்நிலையில் இந்த வருடம் ஆடிக்கிருத்திகை ஆகஸ்ட் 28 ஆம் தேதி மிகச்சிறப்பாக கொண்டாடவுள்ள நிலையில் ஆகஸ்ட் 28 முதல் 30 ஆம் தேதி வரை சிறப்பு மின்சார ரயில்களை அரக்கோணம் – திருத்தணி இடையே இயக்கதெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1. அரக்கோணத்தில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் திருத்தணிக்கு 10.50 மணிக்குச் சென்றடையும்.

2. திருத்தணியில் இருந்து காலை 11 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு அரக்கோணத்துக்கு 11.20 மணிக்கு வந்தடையும்.

3. அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படும் அடுத்த சிறப்பு ரயில் திருத்தணிக்கு 1.25 மணிக்கு வந்தடையும்.

4. திருத்தணியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு அரக்கோணத்துக்கு 1.50 }க்கு வந்தடையும்.

5. அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருத்தணிக்கு 3.05 மணிக்கு சென்றடையும்.

6. திருத்தணியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு அரக்கோணத்துக்கு 3.35 மணிக்கு வந்தடையும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களை ஆடிக்கிருத்திகைக்கு திருத்தணி வரும் முருக பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

English Summary :Aadi Kiruthigai Upon Arakkonam – Special Trains between Thiruthani