முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டிபள்ளி மாணவர்களுக்கு அக். 15-இல் தண்ணீர் பரிசோதனைத் திறன் போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாள் அக். 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய – மாநில அரசுகள் சார்பில், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தேசிய அளவில் தண்ணீர் பரிசோதனைத் திறன் போட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வித் திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ. மூலம் பள்ளிகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 402 பள்ளிகளில் அப்துல் கலாம் பிறந்த நாளில் அறிவியல் மற்றும் தண்ணீர் பரிசோதனைத் திறன் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் 402 வட்டாரங்களில் தலா ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு, தேசியப் போட்டிக்கு அனுப்பப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஏரி அல்லது குளத்து நீர், நிலத்தடி நீர் என மூன்று வகையான நீர் மாதிரியை பயன்படுத்தி மூன்று வகைப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

ஒன்பது முதல் பிளஸ் 2 வரையில் உள்ள மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *