மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டபடி இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே எக்கச்சக்கமான அப்டேட்டுகளை வெளியிட்டு இருக்கிறது.
அதாவது, வாட்ஸ் அப் செயலியில் எமோஜி கீபோர்டில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ் அப் மூலம் நேரடியாக புகைப்படம் மட்டுமே எடுக்கும் வசதி வழங்கப்பட்ட நிலையில் வீடியோ எடுக்கும் வசதியினையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருக்கிறது.
மேலும், கூடிய விரைவிலேயே வீடியோ கால் மூலமாக ஸ்கிரீன் ஷேரிங் முறையையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, உங்களது வாட்ஸ் அப் செயலில் இருந்து மற்றொருவருக்கு அனுப்பப்படும் செய்தியினை எடிட் செய்து கொள்ளும் வசதியினை வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே இந்த எடிட் செய்யும் வசதியினை whatsapp நிறுவனம் வழங்கிய நிலையில் சில நிமிடத்திற்கு மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது பயனர்களுக்கு அனுப்பிய செய்தியினை 15 நிமிடத்திற்குள் எடிட் செய்யும்படியாக ஒரு புதிய அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், தற்போதைக்கு ஒரு சில பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் அனைத்து பயனர்களும் இந்த எடிட் செய்யவும் அப்டேட்டினை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.