சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் வண்டலூர் உயிரியல் பூங்காவும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து இங்கு பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு விலங்கினங்களை கண்டு களித்து செல்கின்றனர். மேலும் தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை ஆரம்பமாகவுள்ளதால் வரும் நாட்களில் இன்னும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் உணவகங்களை பூங்காவின் உள்பகுதியில் திறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. பூங்காவின் உள்ளே அதிக தூரம் நடந்து சென்ற பின்னர், சுற்றுலா பயணிகளுக்கு பசியெடுத்தால் மீண்டும் பூங்காவின் நுழைவாயில் பகுதிக்கு வரவேண்டிய நிலை தற்போது உள்ளது. சாப்பிட்டுவிட்டு மறுபடியும் உள்ளே நடப்பது சிரமமாக இருக்கின்ற காரணத்தால் பூங்காவின் உள்பகுதியில் ஆங்காங்கே தற்காலிக உணவகங்கள், தின்பண்டங்கள் கூடம் அமைத்தால் வசதியாக இருக்கும் என பார்வையாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியபோது, ‘‘வண்டலூர் பூங்காவில் கூடுதல் உணவகங்கள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என்றும் பூங்கா நிர்வாகத்துடன் கலந்துபேசி, அவர்களது ஒப்புதலின் பேரில் இடம் தேர்வு செய்து கூடுதல் உணவகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்தனர்.

English Summary :After the request from visitors, Vandaloor Zoo officials planning to set new restaurants.