அக்டோபர் 1 முதல் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு கூடுதலாக பயணிகள் ரயில் ஒன்று இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காஞ்சிபுரத்திலிருந்து காலை 6.10-க்கு கிளம்பும், செங்கல்பட்டை காலை 6.55-க்கு அடையும். அங்கிருந்து காலை 7.10-க்கு புறப்படும் ரயில் தாம்பரத்தை காலை 7.58-க்கு அடையும்.
பின்னர், தாம்பரத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை காலை 8.55 மணிக்கு அடையும். இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும், இந்த ரயில் நின்று செல்லும்.
செப்டம்பர் 30 முதல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் எண் 40561 பயணிகள் ரயில் காஞ்சிபுரம் வரை நீட்டிக்கப்படுகிறது. சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.40-க்குப் புறப்படும் இந்த ரயில் செங்கல்பட்டை இரவு 8.30-க்கு சென்றடையும். அங்கிருந்து இரவு 8.45-க்கு புறப்படும் ரயில் காஞ்சிபுரத்தை இரவு 9.40-க்கு சென்றடையும்.
இதை முன்னிட்டு, சில ரயில்களின் புறப்பாடு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பேருந்துக் கட்டண உயர்வை தொடர்ந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.