ஆப்பிரிக்க கலைஞர்களின் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியை பார்க்க சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்தனர்.
சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி கடந்த 11ஆம் தேதி முதல் ஆரம்பமானது. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மணிபுரி கலைஞர்களின் ‘ஜம்போ சர்க்கஸ்’ கலை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. குறிப்பாக ஆப்பிரிக்க கலைஞர்களின் மனித பிரமிடுகள், பல்வேறு சாகச வித்தைகள் ஆகியவை மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து கூறினர்.
லிம்போ டான்ஸ் ‘தீ’ உண்ணுதல், எரியும் நெருப்பின் கீழ் நடனங்கள் செய்தல், ஆப்பிரிக்க இசைக்கேற்ப நடனமாடுதல் ஆகியவை பரவசமடைய செய்கின்றன. ‘போல் அக்ரோ பாடிக்ஸ்’ கலைஞர்களின் வெவ்வேறு விதமான கம்பங்களில் ஏறி ஒரு கம்பத்தில் இருந்து மற்றொன்றுக்கு தாவுதல் வியக்க வைக்கிறது.
கண்ஸ்ரிபிங்நெல் செங்குத்தாக ஊஞ்சலாடும் அக்ரோபேட், ரோப் பேலன்ஸ் எனப்படும் கயிறு சாகச நிகழ்ச்சி, குளோப் மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சி அனைவரையும் கவருகின்றது.
பிரேசில் நாட்டின் அரியவகை கிளி, ஆஸ்திரேலிய வகை பறவை விளையாட்டுகள் பிரமிப்பூட்டுகிறது.
இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி தினசரி 3 காட்சிகளாக மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என நடைபெறுகிறது. பொங்கல் விடுமுறையில் இந்த சர்க்கஸை காண அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: African Circus Festival in Chennai Tourism Exhibition.