புதியதலைமுறை தொலைக்காட்சியில் 13 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்படும்”அக்னி பரீட்சை” நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.இதன் மறு ஒளிபரப்பு ஞயிற்று கிழமை மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ் செய்தி ஊடகத்தில் அனைத்து முக்கிய அரசியல் ஆளுமைகளுடன் அனல் பறக்கும் கேள்விகளால் பார்வையாளர்களின் சிந்தனையை விரிவுப்படுத்தும் பணியை செய்கிறது “அக்னி பரீட்சை”
அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நேர்காணல் நிகழ்ச்சியாக இது உள்ளது. ஒவ்வொரு கட்சியின் கொள்கை, நிலைப்பாடு என அனைத்து கருத்துக்களும் எல்லா கோணங்களிலும் இதில் விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை அரசியல் பிரிவு தலைமை ஆசிரியர் கார்த்திகேயனும் மூத்த ஆசிரியர் விஜயனும் நெறியாளுகை செய்கிறார்கள்.