இதுவரை தண்ணீரைத்தான் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களில் விற்பனை செய்வதை பார்த்திருக்கின்றோம். ஆனால் சீனாவில் சுத்தமான காற்றை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி அதை விற்பனை செய்யும் புதிய தொழில் தற்போது சூடு பிடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பெருகி வரும் வாகனங்களில் புகைகள் உள்பட பல்வேறு காரணங்களால் சுற்றுப்புறங்கள் மாசு அடைந்து சுத்தமான காற்று இனிமேல் கிடைக்குமா? என்ற ஏக்கம் மக்களிடையே பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள குவாண்டோங் என்ற மாகாணத்தின் மலைப் பிரதேசத்தில் ‘சுத்தமான காற்றை’ பிளாஸ்டிக் பைகளில் அடைத்து அந்த பகுதி பொதுமக்கள் சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த மலைப்பிரதேசத்தில் வாழும் மலைப்பகுதி மக்கள் இரண்டு விதமான பிளாஸ்டிக் பைகளில் காற்றை விற்பனை செய்து வருகின்றனர். சிறிய பை 98 ரூபாய்க்கும் பெரிய பை 288 ரூபாய்க்கும் கிடைக்கிறது. மலையின் இதயப் பகுதியில் இருந்து இந்தச் சுத்தமான காற்றைப் பிடித்து வருவதாகச் சொல்கிறார்கள். பையைப் பிரித்து காற்றை உடனே சுவாசிக்கலாம், வீட்டுக்கு எடுத்துச் சென்றும் பயன்படுத்தலாம். காற்று விற்பனை சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும் சீனாவில் காற்று மாசு அதிகம் என்பதால், சுத்தமான காற்றை மக்கள் நாடுகிறார்கள்.
சீனாவை அடுத்து காற்றை விற்பனை செய்யும் இந்த தொழில் உலகின் மற்ற நாடுகளுக்கும் விரைவில் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary:Air in plastic bags like water bags in China.