பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் நிரப்பப்பட உள்ள 29 ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Aircraft Technician
காலியிடங்கள்: 29
1. Airframe – 08
2. Engine – 01
3. Electrical – 06
4. Instrument – 05
5. Radio – 04
6. Safety Equipment & Weapon Fitter – 05
வயதுவரம்பு: 01.11.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு கோருவோருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://meta-secure.com/hal/overhaul/pdf/HAL_Notification_281118.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.12.2018