தமிழகத்தில் இப்போது மாநில அரசு பல்வேறு நல திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் பசுபதிக்கோவில் கிராமத்தில், குழந்தைகள் தொட்டிகள், உடற்பயிற்சி நிலையம், நடைபாதை போன்றவைகள் கொண்ட ‘அம்மா பூங்கா’ இப்போது அமைக்கப்பட்டுள்ளது.
ரூ 30 லட்சம் மதிப்பீட்டிலான இந்த பூங்காவை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு திறந்து வைத்தார். இது அப்பகுதியில் உள்ளவர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.