சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் சென்னை அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அண்ணா சாலை, ஏ.ஜி.டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை உள்ள 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் நிலைய பணிகள் தற்போது நிறைவடைந்து பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யும் நிலையில் தற்போது உள்ளது.
இதை தொடர்ந்து சுரங்க ரயில் நிலையத்தில் மின்சார வசதிகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், பயணிகள் அமரும் வசதி உள்ளிட்ட பணிகளும், அதனை தொடர்ந்து சாலைகள் அமைக்கப்பட்டும் வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவன பணியின்போது மாற்றப்பட்ட ஒரு வழிப்பாதை விரைவில் இருவழிப்பாதையாக 6 ஆண்டுகளுக்கு பிறகு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.