பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படம் ‘இறவி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் கூறி வந்த நிலையில் தற்போது நடிகை அஞ்சலி இந்த படத்தின் ஹீரோயின்களில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அஞ்சலி தற்போது ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர்’ மற்றும் விமலுடன் ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஆகிய படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இம்மாத இறுதியில் அவர் இறவி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

English Summary : Anjali accepts to join in Karthi Suburaj’s next film “Iravi”.