சமீபத்தில் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு, மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை என்று நினைத்த மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். மறுகூட்டல் மதிப்பெண் விபரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மறுகூட்டலில் 12ஆம் வகுப்பு தேர்வில், 2,278 பேரும், 10ம் வகுப்பு தேர்வில், 450 பேரும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு விடைத்தாள்கள் திருத்திய ஆசிரியர்களின் கவனக்குறைவே காரணம் என்று விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேர்வுத் துறை முடிவு செய்து, அவர்களின் பட்டியலை தயாரித்தது
இதனை அறிந்த ஆசிரியர் சங்கங்கள் இந்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என தகவல் அனுப்பியதாகவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல், சம்பந்தப்பட்ட விடைத்தாள் மைய கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அதிகாரி, மண்டல பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் தகவல்கள் வந்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
English Summary: Answer sheet on the wrong Correction. Are there penalties for teachers?