தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரி என 139 குரூப்-1 அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 139

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: Deputy Collector – 27
பதவி: Deputy Superintendent of Police – 56
பதவி: Assistant Commissioner (C.T.) – 11
பதவி: Deputy Registrar of Co-operative Societies – 13
பதவி: District Registrar – 07
பதவி: Assistant Director of Rural Development – 15
பதவி: District Employment Officer – 08
பதவி: District Officer (Fire and Rescue Services) – 02

சம்பளம்: மாதம் ரூ.56100 – 1,77,500
தகுதி: இளங்கலை பட்டம்

வயது வரம்பு: 01.07.2019 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 37 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உதவி ஆணையர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோருபவருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கட்டணம் விவரம்: முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.100 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.350 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஒரு முறை பதிவுக் கட்டண முறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.150 செலுத்த தேவையில்லை. சில பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையம்: சென்னை

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnspc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்த கடைசி தேதி: 02.02.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 03.03.2019

அன்று நடைபெறும்! முதன்மை எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *