12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. தற்போது தேர்வுத்தாள் திருத்தி முடிக்கப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செயும் பணிகளும் முடிவடைந்து விட்டது. மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏராளமான மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களூம் வரும் மே 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பல தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோடம்பாக்கம் மீனாட்சி கலை அறிவியல் கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஆனாலும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பின்னரே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary : Arts college application for 12th passed out students.