கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “ரஞ்சிதமே” மெகாத்தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நெடுந்தொடரில், நாயகி ரஞ்சிதாவாக மனிஷாஜித்தும், மாமியாராக ரூபாஸ்ரீயும், நாயகனாக சதீஷூம், முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிநந்தன், ராம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தொடரில் தற்போது, அருண் தனது அம்மாவிடம் ரஞ்சிதாவை திருமணம் செய்த விஷயத்தை சொல்ல அருண் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். மேலும் அருணின் அம்மா வேதவல்லி வீட்டில் இருந்து காணாமல் போகிறார்.
காணாமல் போன வேதவல்லியை அனைவரும் தேடி திரிய, இந்த விஷயம் ரஞ்சிதாவின் மாமா தீனாவுக்கு தெரியவர, வேதவல்லியை கண்டுபிடித்து கொன்றுவிட்டால் ரஞ்சிதாவை அந்த வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என யோசிக்கும் தீனா, வேதவல்லியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
இதற்கிடையே, அனாதை பிணம் ஒன்றை கண்டுபிடிக்கும் போலீசார், அதை அருண் வீட்டிற்கு தெரியப்படுத்த கணத்த இதயத்துடன் அருண் வீட்டார் கிளம்பி செல்கின்றனர். இறுதியில், அருணின் அம்மா கிடைத்தாரா? ரஞ்சிதாவை அருண் வீட்டில் ஏற்றுக்கொண்டார்களா? என்கிற பரபரப்பு மற்றும் பல்வேறு திருப்பங்களுடன் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.