ஜெயா தொலைக்காட்சியில் பலவிதமான சமையல் நிகழ்ச்சியில் ஒன்றான “அறுசுவை நேரம்” நிகழ்ச்சி வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் சமையல் கலை நிபுணர் திருமதி .மல்லிகா பத்ரிநாத் அவர்கள் பாரம்பரிய சமையல் மற்றும் தினசரி சமையல் ஆகிய தலைப்புகளில் வித விதமான சைவ உணவுகளை சமைத்து காட்டுகிறார் .
இந்த வார நிகழ்ச்சியில் வேப்பம் பூ சாதம் ,மாம்பழ சாதம் ,கம்பு நூடுல்ஸ் ,காகரா சாலட் ஆகிய சுவையான உணவு வகைகளை செய்து காட்டுகின்றனர் . மேலும் உணவும், ஆரோக்கியமும் பகுதியில் ஊட்டச்சத்து நிபுணர் (Nutritionist) திருமதி .பவானி செந்தில் அவர்கள் மக்களின் ஆரோக்கியம் சார்ந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் . இந்நிகழ்ச்சி இல்லத்தரசிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .