இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அடுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘புறம்போக்கு. இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் உள்பட பலர் நடித்துள்ளனர். வர்ஷன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யூடிவி நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தினம் மற்றும் அஜீத் பிறந்த தினம் ஆகிய சிறப்பு வாய்ந்த மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் இந்த திரைப்படம் சமூக மற்றும் பொருளாதார அம்சங்கள் கொண்ட ஒரு த்ரில்லர் படம் என்றும், இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறையில் எடுக்கப்பட்டது என்றும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தெரிவித்துள்ளார்.

புறம்போக்கு படத்தின் நாயகி கார்த்திகா நாயர், இந்த படத்தில் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் டூப் இன்றி நடைத்துள்ளார் என்றும் இதற்காக அவர் முறையான பயிற்சியை எடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

English Summary : “Porambokku” film will be released on May 1 Ajith Birthday.