தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை காரணமாக, தினசரி மின்தேவை சராசரியாக 2,000 மெகாவாட்டுக்கு மேல் குறைந்துள்ளது. தமிழகத்தில் மின்தேவை தினமும் சராசரியாக 14,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடைகாலத்தில் அதிகபட்சமாக 16,000 மெகாவாட்டாகவும், குளிர்காலத்தில் 12,000 மெகாவாட்டாகவும் இருக்கும்.

இந்நிலையில், பண்டிகை கால தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் ஊருக்குச் சென்றனர். இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள், அரசு, தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. மேலும், இம்மாத தொடக்கத்திலிருந்து வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடும் குறைந்துள்ளதால், தினசரி மின்தேவை 11,200 முதல் 11,600 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *