12ஆம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பிய மாணவர்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமான இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கலந்தாய்வு தேதி முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், 51,428 பேர் மட்டுமே இதுவரை பி.இ. படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 1,34,242 இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் அதிகபட்சம் பத்தாயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், ஒரு லட்சத்து 25ஆயிரம் இடங்கள் வரை இந்த ஆண்டு காலியாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை ஜூன் 27-இல் தொடங்கியது. ஜூலை 21-ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது.
இதுவரை ஓ.சி. பிரிவின் கீழ் 25,264 பேர், பி.சி. பிரிவின் கீழ் 12,218 பேர், பி.சி.எம். பிரிவின் கீழ் 1,374 பேர், எம்.பி.சி. பிரிவினர் 8,163 பேர், எஸ்.சி. பிரிவினர் 3,848 பேர், எஸ்.சி.ஏ. பிரிவினர் 470 பேர், எஸ்.டி. பிரிவினர் 91 பேர் என மொத்தம் 51,428 பேர் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர்.
கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,32,216 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 1,964 இடங்களும், அரசு – அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 62 இடங்களும் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.
English Summary :BE Course: Only 51 thousand admissions: 1.34 lakh seats available