ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வாரம் உலக பார்வை குறைபாடு விழிப்புணர்வு வாரம் என உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையிலும் வரும் இந்த வாரத்தில் உலக பார்வை குறைபாடு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் சென்னையில் இலவச கண் பரிசோதனை முகாம்கள், மனிதச் சங்கிலி உள்பட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மத்திய சென்னை அரிமா சங்கம் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, எக்ஸ்னோரா அமைப்பு ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளன. சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள ஸ்ரீ ஆர்.கே.எம். சாரதா வித்யாலய மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம், மனிதச் சங்கிலி ஆகியவை நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள எஸ்.ஆர்.கே.எம். சாரதா வித்யாலய பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நாளை காலை 9.30 மணிக்கு சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் உள்ள அஞ்சுகம் தொடக்கப் பள்ளியிலும், வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் கல்லூரியில் இலவசக் கண் பரிசோதனை முகாம்கள் நடைபெறவுள்ளன.

கண் குறைபாடு உள்ளவர்களும், பொதுமக்களும் இந்த இலவச கண் பரிசோதனை முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

English Summary : International Blindness Awareness week to be conducted in Chennai.