1998ம் ஆண்டு நடந்த திரைப்பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜோத்புர் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. சல்மான் கான் குற்றவாளி என்றும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் விடுவிக்கப்பட்டனர். சல்மானுக்கு அதிகபட்சம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது.
பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர், ராஜஸ்தானில் 1998ல் ஹிந்தி பட சூட்டிங்கில் இருந்தனர். அப்போது அங்குள்ள வனப் பகுதிக்கு வேட்டையாடசென்றுள்ளனர். இரண்டு மான்களை சுட்டுக் கொன்றதாக, நடிகர்கள் சல்மான் கான், சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சல்மான் விடுதலை செய்யப்பட்டார். மான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் ஜோத்புர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
சல்மான் கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சல்மான் கானிற்கான தண்டனை விவரங்களையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சல்மான் கான் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும், ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
English Summary: Bollywood star Salman Khan sentenced to five years for killing antelopes.