ரயில்களில் தற்போது முதல் வகுப்பு மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே தலையணை, போர்வையைப் பெறும் வசதி உள்ளது. ஆனால் இனிமேல் படுக்கை வசதிப் பெட்டிகளின் பயணிகளுக்கும் இந்த வசதியை அளிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி பயணிகள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும்போது தலையணை மற்றும் போர்வையை தேர்வு செய்யும் வசதி இந்த மாதத்தில் அறிமுகமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும்போது தலையணை, போர்வைக்கும் சேர்த்து கட்டணம் செலுத்தினால், அந்தந்த ரயில் நிலையத்தில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த வசதி முதல்கட்டமாக டெல்லி, மும்பையைச் சேர்ந்த 4 ரயில்களில் விரைவில் அறிமுகமாகிறது என்றும் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English summary-The Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) has decided to introduce e-bedroll facility that allows passengers to order bedrolls online on a trial basis at four stations.