சிறந்த தொலைத்தொடர்பு சேவைக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. வேலூரில் தமிழக அரசு சார்பில் நேற்று விழா நடைபெற்றது. இதில், தொலைத்தொடர்ந்து துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டத்திற்கு அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் விருது வழங்கினார்.
அந்த விருதினை பி.எஸ்.என்.எல் முதன்மை மேலாளர் ராஜூ பெற்றுக்கொண்டார். திறன் அபிவிருந்தி திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி அளித்துள்ளதாக பி.எஸ்.என்.எல் தமிழக வட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த மாத சம்பளத்தை இன்னும் ஊழியர்களுக்கு வழங்கவில்லை எனத் தெரிகிறது. வழக்கமாக மாதத்தின் கடைசி நாள் அல்லது அடுத்த மாதத்தின் முதல் நாளில் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கும் சம்பளம் வந்துவிடும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தின் சம்பளம், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இன்னும் செலுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.