SENIOR_CITIZENS_2741794fதமிழக முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது மூத்த குடிமக்களுக்கு தேவையான சலுகை திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை மாநகர எல்லைக்குள் வசிக்கும் மூத்த குடிமக்கள், மாநகர பேருந்து நிலையங்கள், பணிமனைகள் என 42 இடங்களில் இலவச பயண அட்டையைப் பெறலாம் என்று அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது, வயது, இருப்பிடச் சான்றுக்காக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் அட்டை அல்லது பள்ளிச் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெவ்வெறு இடங்களில் வெவ்வேறு அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டையை சிலர் பெறுவதாக புகார்கள் எழுந்தன.

இதனால், ரேஷன் அட்டையை மட்டுமே இருப்பிடச் சான்றாகப் பெற்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒருமுறையும், ஒவ்வொருவருக்கும் அடுத்து வரும் மூன்று மாதத்துக்கான டோக்கன்கள் 15 நாள்களுக்கு முன்பிருந்தே புதுப்பித்து அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

English Summary :Bus travel card, ration card and forced to senior citizens.Govt of TN Announcement